Tuesday, October 24, 2017

thumbnail

அமேசன் நதி

அமேசன் நதி



   நதிகள் உலகின் உயிர் நாடிகள் என்று போற்­றப்­ப­டு­கின்­றன. உலக இயக்­கத்தின் இயந்­தி­ரங்­க­ளான நதி­களில் அமேசன் நதி உல­கிலே இரண்­டா­வது பெரிய நதி­யாகும். இந்நதி கொண்ட பரப்பு 4000 மைல்கள் அக­ல­மு­டை­யது.



பொதுஅறிவு  வினாவிடை தொகுப்பு  Click  Here 


அமேசன், அந்தீஸ் மலையில் இருந்தும்  இன்னும் சில உயர்நிலப்­ பி­ர­தே­சங்­களில் இருந்தும் பல ஆறு­களை இணைத்துக் கொண்டு தென் அமெ­ரிக்­காவின் கிழக்குப் பகு­தியில் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­துடன் இணை­கின்­றது.

உல­கிலே பல உப நதி­களின் வடி­மா­னங்­க­ளையும் தாழ் நிலங்­களில் பரப்பிக் கொண்டு ஓடு­வது அமேசன் நதிக்கே உள்ள மற்­று­மொரு சிறப்­பம்­ச­மாகும். 1500ஆம் ஆண்­ட­ளவில் Vicente Yanez Pinzo என்­ப­வரே அமேசன் நதியின் ஆற்று முகத்­தினை கண்­டு­பி­டித்தார்.

1541இல் அமேசன் பிர­தான நதி­யி­னூ­டாக கடலைச் சென்­ற­டைந்­த­துடன், தன் அற்­பு­தப் ­ப­ய­ணத்­தையே அந் நதிக்கும் பெய­ரிட்­டவர் Francisco Orellana ஆவார்.

பிறேசில் நாட்டின் அரை­வா­சியே அமேசன் நதியால் சூழப்­பட்­டுள்­ளது. பிறே­சிலின் முழு சனத்­தொ­கையில் 10 சத­வீ­தத்­தினர் இங்கு வசிக்­கின்­றனர். இதே சனத்­தொகை தன்மை பேரு, ஈக்­கு­வ­டோ­ரிலும் இந் நதி­யினைக் கொண்ட பகு­தி­களில் காணப்­ப­டு­கின்­றன.



அமே­சனைச் சூழ வாழும் பெரும்­பா­லான மக்­களின் போக்­கு­வ­ரத்துப் பய­ணங்­களும் இந்நதி­யி­னூ­டா­கவே காணப்­ப­டு­கின்­றன.

மறு­ம­லர்ச்சிக் காலத்தில் பல செவ்­விந்­தி­யர்­களே இங்கு முதலில் குடி­யே­றி­ய­தாகச் சொல்­லப்­ப­டு­கின்­றது.

இட அமைவு

அமேசன் நதி தென்­ன­மெ­ரிக்­காவின் மேற்கு எல்­லையில் வடக்கு தெற்­காக அமைந்­துள்ள அந்தீஸ் உயர்­மலைத் தொடரில் இருந்து பல உப நதி­க­ளாகப் பிரிந்து, தென் ஆபி­ரிக்­காவின் கிழக்கு எல்­லையில், அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­துடன் இணை­கின்­றது.

கால­நிலை

மத்­திய கோட்டை வெட்டிக் கொண்­டு­செல்லும் வகையில் அமேசன் தாழ்­நிலம் அமைந்­துள்­ளது. இவ்­வி­டத்தில் வித்­தி­யா­ச­மான கால­நிலை நில­வு­கின்­றது. அதா­வது, அயன வலயம் என்­றாலே அதிக வெப்பம் நிலவும் பகு­திதான்.

ஆனால், அமேசன் பகு­தி­யினைப் பொறுத்­த­மட்டில் இம் மத்­திய கோட்டை ஊடறுத்துச் சென்­றாலும், அமேசன் நதி­யி­னதும் அமேசன் வனாந்­த­ரத்­தி­னதும் இயல்பாய் ஈர­லிப்பைப் பெற்றுக் காணப்­ப­டு­கின்­றது. இங்கு வெப்­ப­நிலை சரா­ச­ரி­யாக 4 பாகையிருந்து 78 பாகை வரை நில­வு­கின்­றது.

எனினும், இப்­ப­கு­தியை வெப்ப வலயம் எனக் கரு­தி­விட முடி­யாது. சம தரை­யான பகு­தி­க­ளுக்குள் காடு­களை மிகை­யாகக் கொண்­டி­ருப்­பதால் அதிக ஈரப்­ப­தனைக் கொண்­டுள்­ளது மட்­டு­மன்றி, மேற்குக் கரையில் எல்­நி­னோவின் தாக்­கத்­தையும், வட கிழக்­காக வியா­பாரக் காற்றின் தாக்­கத்­தையும் அனு­ப­விப்­பதால் இங்கு ஈர­லிப்­பிற்குச் சாத­க­மா­கி­யுள்­ளது.

அமேசன் பகு­திகள் ஜன­வரி தொடக்கம் ஜூன் வரையும் மழை மய­மான கால­நிலை நிலவ, அடுத்த ஆறு மாதங்­க­ளிலும் வரட்சித் தன்மை என்று சொல்லும் அள­விற்கு இல்­லா­விட்­டாலும், பெரும்­பாலும் ஈரக்­க­சி­வான தன்­மையில் காணப்­ப­டு­கின் ­றது.

அமேசன் நதியின் நீர் வரம்புப் பரப்­பா­னது கிட்­டத்­தட்ட 3 மில்­லியன் சதுர மைல்­க­ளாகும். அந்தீஸ் மலையின் நடுப்­ப­குதி பேருவின் மத்­தியில் காணப்படுகிறது

இம் மலை உச்­சியில் இருக்கும் பனிப் பாறைகள் வெப்ப காலத்தில் உருகும் போது, பனி­யாறு பேருவில் காணப்­படும் ஏரி­க­ளுக்கு நீரினை வழங்க, மிகுதி நீர் சிறு நதிகள் வழி­யாக பசுபிக் சமுத்­தி­ரத்­திற்குச் செல்­கின்­றது.

இதுபோக பனி­யா­றுகள் சில மலை­களிலி­ருந்து கிழக்­காக ஓடு­கின்ற அமேசன் கிளை நதிகள் ஊடாக நிமி­டத்­துக்கு 42 மில்­லியன் கன அளவில் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­துடன் இணை­கின்­றன.

இந்த அளவு, வரு­டத்தில் சில காலங்­க­ளுக்கு மாற்­ற­ம­டை­கின்­றது. பாரிய அளவில் கருமையான வண்டல் படி­வு­களை கொண்டு செல்லும் போது நதி இரு மருங்­கிலும் படி­ய­வி­டு­வ­துடன், அமேசன் கழி­முகம் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் கலக்கும் கரை­க­ளிலும் 50 மைல் உய­ரத்­திற்கு இவ் வண்டல் படி­வுகள் படி­கின்­றன.

பொது­வாக வரு­டத்­திற்கு ஓரிரு முறை­களே அமேசன் நதிக்கு வெள்ள அபாயம் நில­வு­வ­தாகச் சொல்­லப்­ப­டு­கின்­றது. ஆகஸ்ட், – செப்­டம்பர் மாதங்­களில் அந்­தீ­ஸி­லி­ருந்து பனி உருகி வழிய, நவம்பர் வரை அமே­சனில் நீர் மட்டம் உயர்­கி­றது. ஜன­வரி – மே மாதங்­களில் வெப்பக் கால­நி­லையின் செல்­வாக்­கினால் நீர் மட்டம் குறைய ஏது­வா­கின்­றது

காடு

மானிட அமை­வி­டங்­களில் பயிர் நட­வ­டிக்­கை­க­ளுக்குச் சாத­க­மான கால­நிலை என்­பது சற்றுக் குறை­வாகக் காணப்­ப­டு­கி­றது. அதிக ஈரப்­பதன் மட்டும் பயிர் நட­வ­டிக்­கை­களை தீர்­மா­னிக்கவல்­லன அல்ல. இவற்­றோடு வெப்பமும், வரட்­சியும் ஒத்­து­ழைக்க வேண்டும்.

அமேசன் நதி­யினை ஆக்­கி­ர­மித்­தி­ருப்­பதே அமேசன் காட்டுப் பகு­திகள்தான். எனவே, இங்கு பயிர் நட­வ­டிக்­கை­களைத் தவிர காடு­படு தொழில்­களே சிறப்­புற்று விளங்­கு­கின்­றன.

உல­கிலே அதிக ஈர­லிப்­பினைக் கொண்­டது அமேசன் காடு­க­ளாகும். மட்­டு­மன்றி, உலக காட்டு நிலப்­ப­ரப்­பிலும் அமேசன் காடே முதன்மை வகிக்­கின்­றது. நிலத்­தினுள் பல மீட்­டர்­க­ளுக்கு வேரினை ஊட­றுத்துச் செல்லும் மரங்கள் காணப்­ப­டு­கின்­றன.

இம் மரங்கள் அதிக தடிப்­பா­ன­வை­யா­கவும் அதிக வைர­மா­ன­வை­யா­கவும் விளங்­கு­கின்­றன. அயன வல­யத்தில் அமைந்­துள்ள அமேசன் காட்டு மரங்­களின் கிளைகள் வியா­பித்தும், இலைகள் தட்­டை­யாக அகன்றும் காணப்­ப­டு­வதால் சூரியன் தன் ஒளி­யினை நிலத்­தினில் பரப்ப படா­த­பாடு படு­கின்­றது.

இவை தனக்குத் தேவை­யான சூரிய ஒளி­யினை பெற்றுக் கொள்­ள­வேண்டி ஒன்­றி­லொன்று முட்­டி­மோ­திக்­கொண்டு வளர்­வதால் இம் மரங்­களின் உயரம் 50 மீட்­டர்­க­ளையும் தாண்டி வளர்­கின்­றன.

இவ்­வாறு ஒன்­றி­லொன்று போட்­டி போட்டுக் கொண்டு வளரும் மரங்­களில் றப்பர் மரங்கள் முக்­கியம் பெறு­கின்­றன. றப்பர் மரத்தின் பிறப்­பிடம் அமேசன் காடுகள் என்றும் சொல்­லப்­ப­டு­கின்­றது.

20ஆம் நூற்றாண்டில் முதல் பத்து வரு­டங்கள் உல­கிலே அநே­க­மான நாடு­க­ளுக்கு றப்­ப­ரினை இவ் அமேசன் காடு­களே வழங்­கி­ய­தாகச் சொல்­லப்­ப­டு­கி­றது. 1910ஆம் ஆண்டில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் இங்­கி­ருந்தே றப்பர் மர வள­ர்ப்­பினை தன் தேசங்­க­ளுக்கும் அறி­மு­கப்­ப­டுத்­தின.

இவை­போ­லவே இன்னும் பல வைர மரங்­களும் இங்கு வளர்­வ­துடன், அவற்றில் பிணைந்துக் கொண்டே ஏறு­கொடி வகை­களும் வளர்­கின்­றன.

உல­கிலே அதி நஞ்சு வாய்ந்த மலைப் பாம்­பி­னங்கள், குரங்கு வகைகள், முதலை, உடும்பு, வண்­ணாத்துப் பூச்­சி­யி­னங்கள், டரன்­டுலா, டொமன்ஞர் போன்ற ராட்­சத சிலந்தி வகைகள் இன்னும் ஈர­லிப்பில் வளரக்கூடிய சதை நத்தை, அட்டை, தவளை, தேரை. போன்ற விலங்­கி­னங்­களும் மெகோவ் ராஜக் கிளி­களும் சிறப்­பாக இங்கு வசித்து வரு­கின்­றன.

தொடர்­பாடல்

இவ் வலயத்தில் நெடுஞ்சாலைகளோ தண்டவாளப் பாதைகளோ இல்லை. சாதாரணமாக வான் வழியாகவும் பெரும்பாலும் நதி வழியாகவும்தான் போக்குவரத்துக்கள் இடம்பெறுகின்றன. பெரிய அளவில் முக்கியம் வாய்ந்த வான் பயணங்கள் அமேசன் காடுகளின் மேலாகச் செல்வது அரிதாகும்.

நதிவழியாகவும் சாதாரண படகுகளையும் கப்பல்களைக் கொண்டுமே நடைபெறுகின்றன. இந் நதி வழிப் போக்குவரத்தை ஆபத்தாக்கும் வகையில் நதிகளின் சில இடங்களும் ஆபத்தாகவே உள்ளன. இதனால் இன்றிய மையாத கப்பல் போக்குவரத்துச் சேவை கள் மாத்திரம் நடைபெறுவதுடன், அந்நதி, காட்டினைப் பற்றி நன்கறிந்தவர்களே அப் பிரதேசத்தில் தங்கள் ஜீவனோபாயத்தை செய்வது வழக்கம்.


தென் அமெ­ரிக்­காவின் வட பாகத்தில் வியா­பித்துக் காணப்­படும் சம­வெ­ளியில் அமேசன் ஈர­நிலக் காடு­களால் அதி­க­மாக சூழப்­பட்­டுள்­ளது. அந்தீஸ் மலையைத் தவிர ஏனைய இடங்­களில் மேட்டு நிலத்­தி­னையும் பெரும்­பா­லான சம­வெ­ளி­களைக் கொண்டே அமேசன் நதி பாய்ந்­தோ­டு­கின்­றது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About