மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்து சாவு


மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்து சாவு
x
தினத்தந்தி 29 Jan 2019 10:15 PM GMT (Updated: 29 Jan 2019 9:30 PM GMT)

மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் செத்துவிட்டது.

சிட்னி,

தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்ந்து வந்தன. வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த வகை வாத்துக்கள் கடந்த ஆண்டு 2 ஆயிரம் மட்டுமே இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு மல்லார்ட் இனத்தின் அனைத்து வாத்துக்களும் இறந்து விட, ஒரே ஒரு ஆண் வாத்து மட்டும் இருப்பதாக தெரியவந்தது. கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் அந்த ஆண் வாத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிறகு, உலகின் தனிமையான வாத்து என பிரபலமானது.

இந்நிலையில் மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் செத்துவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் புதர் ஒன்றில் நாய்களால் கடிக்கப்பட்டு வாத்து செத்து கிடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதன் மூலம் மல்லார்ட் இன வாத்து முற்றிலும் அழிந்து போனது.

Next Story