பற்பசை, பிரஷ் விலையை 9% குறைத்தது கோல்கேட்-பாமோலிவ்

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் (எப்.எம்.சி.ஜி.) துறையைச் சேர்ந்த கோல்கேட் பாமோலிவ் இந்தியா நிறுவனம், பற்பசை மற்றும் பல் துலக்கும் பிரஷ்களின் விலையை 8-9 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.
பற்பசை, பிரஷ் விலையை 9% குறைத்தது கோல்கேட்-பாமோலிவ்

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் (எப்.எம்.சி.ஜி.) துறையைச் சேர்ந்த கோல்கேட் பாமோலிவ் இந்தியா நிறுவனம், பற்பசை மற்றும் பல் துலக்கும் பிரஷ்களின் விலையை 8-9 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஜிஎஸ்டி பலன்களை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோல்கேட்-பாமோலிவ் இந்த விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, பற்பசை மற்றும் பல்துலக்கும் பிரஷ்களின் அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆர்பி) 8 முதல் 9 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1-ஆம் தேதி முதல் தயாரித்து விற்பனைக்கு வரும் அனைத்துப் பொருள்களுக்கும் மாற்றியமைக்கப்பட்ட இந்த புதிய விலையில் விற்பனை செய்யப்படும்.
விலைக் குறைப்பு நடவடிக்கையை எளிதாக செயல்படுத்திடும் வகையில் வர்த்தக பங்குதாரர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கோல்கேட்-பாமோலிவ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, கூந்தல் தைலம், சலவைத் தூள், டிஷ்யூ காகிதம், நாப்கின் உள்ளிட்ட பொருள்களை ஜிஎஸ்டி கவுன்சில் 18 சதவீத வரி விகிதத்துக்குள் கொண்டு வந்துள்ளது. அதேசமயம், கோக், பெப்ஸி உள்ளிட்ட குளிர்பானங்களுக்கான வரி 28 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து பல எப்.எம்.சி.ஜி. நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை குறைப்பதாக தொடர்ச்சியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், சில நிறுவனங்கள் பொருள்களின் விலையில் எந்த வித மாற்றமும் செய்யாமல் அதற்கு பதிலாக பொருளின் எடையை அதிகரித்தும் வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com