உதவி

உதவி

  அது ஒரு பயிற்சி முகாம். ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் மத்திய நிலை மேலாளர்களுக்கான (MIDDLE LEVEL MANAGERS) ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சியின் 2-ம் கட்ட முகாம். முதல் கட்ட பயிற்சி முடித்து, 3 வார கால இடைவெளிக்குப் பிறகு நடக்கும் பயிற்சியின் முதல் நாள். முதல் கட்ட பயிற்சியின் போது ஐந்து விதமான பயிற்சிகளை கற்றுக் கொடுத்து தொடர்ந்து மூன்று வாரங்கள் அப் பயிற்சிகளை மேற்கொள்ள சொல்லியிருந்தேன். அவர்கள், அப்பயிற்சிகள் செய்ததால் சொந்த வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் தங்களிடம் உண்டான நல்லதொரு மாற்றங்களைப் பற்றி என்னிடம் பகிர்ந்தார்கள். நம்மால் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவ முடிந்ததே என்று மகிழ்ந்தேன். மன நிறைவுடன் 2-ம் கட்ட பயிற்சியை ஆரம்பித்தேன், ஒரு கேள்வியுடன்.

           ‘உதவி’ ‘HELP’ என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்கள் மனதிற்கு வருவது என்ன? என்று கேட்டேன். அக்கேள்விக்கு பொதுவாகப் பதிலளித்தவர்கள் பலர். தனக்கு உதவியவர்கள் பற்றியும், தான் சில சமயம் செய்யும் உதவிகள் பற்றியும் பேசியவர்கள் சிலர். பெரும்பாலானோர், ‘உதவி செய்ய வேண்டுமென்ற ஆசையெல்லாம் உள்ளது. ஆனால், வரவுக்கும் செலவுக்கும் சரியாகப்போகிற சூழ்நிலையில் இருக்கிறோம். அப்படி இருக்க, நாங்கள் எப்படி அடுத்தவர்களுக்கு உதவி செய்ய முடியும்?’ என்றனர். அனைவரின் கூற்றுகளையும் கேட்ட பின்னர் நான் கூறினேன், ‘உதவும் மனப்பான்மை உங்களுக்கு இருக்கிறது. நிச்சயம் உங்களால் உதவ முடியும், நீங்கள் மனம் வைத்தால்’, என்று. ஆச்சர்ய முகங்கள். மறுபடியும் கூறினேன், 'நிச்சயம் முடியும். ஏதோ ஒரு விதத்தில் உங்களால் அடுத்தவர்களுக்கு உதவ முடியும்’. ஆச்சர்ய முகங்கள் இப்போது சந்தோஷ முகங்களாக மாறியது. ஆம். உங்களிடம் இருக்கக்கூடிய "நல்ல எண்ணங்களை, அன்பை, நேர்மறை எண்ண அதிர்வலைகளை (Positive Vibes) அடுத்தவர்களுக்கு பகிர முடியும் . அப்படி பகிர்வது சக மனிதனுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி" என்றேன்.

           ஆக, உதவி என்பதை பொருளுதவி என்பதுடனே சமன் செய்து பார்க்காமல், அதையும் தாண்டி யோசியுங்கள். பொருள் கொடுப்பது, அவசர காலத்தில் உதவுவது, பேரிடர் காலத்தில் தோள் கொடுப்பது, தான தர்மம் செய்வது, கல்வி கற்றுக் கொடுப்பது - இவற்றினுடன் இனிமேல் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள் - அது, "என்னிடம் இருக்கும் அன்பு, நேர்மறை எண்ணங்கள், அதன் அதிர்வலைகள்".

           பொருளாதரத்தில் எந்த நிலையில் இருந்தாலும், வாழ்க்கைச் சுமைகள் ஏராளம் இருந்தாலும், என்னால் பிறர்க்கு உதவ முடியும் என்ற எண்ணமும், மனமும் இருந்தால் நிச்சயம் உங்களால் ஒருவருக்கு அல்ல, பலருக்கு உதவ முடியும் என்று நான் கூறியதும் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சி வழிந்தோடியது.

           மகிழ்ச்சியுடனே அவர்கள் யோசிப்பதும் எனக்குத் தெரிந்தது . அவர்கள் மட்டுமல்ல, இதைப் படிக்கும் நீங்களும் யோசிக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. நடைமுறை வாழ்க்கையில் என்னால் எப்படிப் பகிர முடியும்; அது எப்படி சாத்தியம்? என்று தானே யோசிக்கிறீர்கள் .

           நீங்கள் மனதார உணருங்கள், என்னால் சக மனிதனுக்கு உதவ முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

 

வழிமுறைகளை நான் சொல்கிறேன்...                    அடுத்த பதிவில்...

I want to do something to that person.

Like
Reply

To view or add a comment, sign in

Explore topics