search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பண்டிகையையொட்டி வண்ண பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
    X

    பொங்கல் பண்டிகையையொட்டி வண்ண பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

    • தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை தை மாத முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது.
    • உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்தத் திருநாளை கரும்பு, இனிப்பு பொங்கலுடன் கொண்டாடி மகிழ்வர்.

    சென்னை:

    சென்னையில் வண்ண பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பொங்கல் பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    வண்ண பொங்கல் பானைகள் ரூ.200 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. புதுமணத் தம்பதிகள் வண்ண புதுப்பானைகளில் பொங்கலிட்டு மகிழ்வார்கள்.

    இதையொட்டி சென்னை நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கொசப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் பானைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விதவிதமான வகையில் பல்வேறு வண்ண பொங்கல் பானைகள் தயாராகி வருகின்றன.

    பொதுமக்களை கவரும் வகையில் பானைகள் வர்ணம் பூசப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பொங்கல் பானை தயாரிக்கும் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை தை மாத முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது.

    உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்தத் திருநாளை கரும்பு, இனிப்பு பொங்கலுடன் கொண்டாடி மகிழ்வர்.

    இதுமட்டுமின்றி, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அதன்பின் உழவர் திருநாளும் கொண்டாடப்படுகிறது.

    மண்பானை, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு உள்ளிட்டவை பொங்கல் தினத்தில் முக்கிய பங்கு வகிக்கும். மண்பானையில் பொங்கல் வைத்து மக்கள் சூரிய வழிபாட்டை மேற்கொள்வார்கள். நகா்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புற மக்கள் அதிக உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவார்கள்.

    பொங்கல் பண்டிகை நெருங்குவதால், மண்பாண்டத் தொழிலாளா்கள் பொங்கல் பானை உற்பத்தி பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக பொங்கல் பானைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையை அடுத்த திருவள்ளூர், செங்கல்பட்டுயொட்டிய கிராமப் பகுதிகளில் தொழிலாளர்கள் பொங்கல் பானைகள் தயாரிப்பில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் பொங்கல் பானைகள் ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பொங்கல் பானைகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×