எடை குறைத்து பாண் உற்பத்தி செய்பவர்களை தேடி நாளை முதல் விஷேட சுற்றிவளைப்பு !!



ஒரு இறாத்தல் பாணின் நிலையான எடையை குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள

நிலையில் எடையை குறைத்து பாண் தயாரிக்கும் பேக்கரிகளை சுற்றிவளைக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.


ஒரு இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விற்பனை செய்யப்படும் பாணின் எடையை காட்சிபடுத்தப்படுமாறு அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


இந்த நிலையில் நாளை முதல் விஷேட சுற்றிவளைப்பு இடம்பெறும் என அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எடை குறைத்து பாண் உற்பத்தி செய்பவர்களை தேடி நாளை முதல் விஷேட சுற்றிவளைப்பு !! எடை குறைத்து பாண் உற்பத்தி செய்பவர்களை தேடி நாளை முதல் விஷேட சுற்றிவளைப்பு !! Reviewed by Madawala News on February 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.