பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



L

LA : எல்.ஏ : இடது இதய மேலறை (Left atrium) என்பதன் சுருக்கம்.

lab : ஆய்வுக்கூடம் (லேப்) : ஆய்வுக் கூடம் என்பதன் சுருக்கம்.

labetaction : நடுக்கம்; தளர்ச்சி.

label : அடையாளச்சீட்டு : 1. ஒரு குறியீடு, 2. உறுப்பு, திசு, உயி ரணு அல்லது உயிரியின் சிறப்பு இணைப்பிரிப்பு. இதில் படிந்து இருக்கும்.

labetalol : லேபட்டாலோல் : மிக உயர்ந்த குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஊசி மூலம் செலுத்தப்படும் ஆல்ஃபாபீட்டா தடுப்பு மருந்து. இதனை வாய் வழியாகவும் கொடுக்கலாம்.

labia : பெண்குறி இதழ் : இதழ் போன்ற பெண்குறியின் பகுதி.

labile : மாறவல்ல; மறக்கக் கூடிய; நிலையற்ற; நிலையா; சீரற்ற : நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய.

lability : நிலையின்மை; மாறும் தன்மை; நிலை பிறளம் : நிலை மாறும் தன்மை.

labiocervical : முன்பல் கன்னப்பரப்பு : ஒரு முன்புறப்பல்லின் தலைப் பகுதியின் கன்னப் பரப்பு சார்ந்த.

labiochorea : உதட்டு இசிவு : உதடுகளில் ஏற்படும் கடுமையான இசிவு. இது சுயகட்டுப் பாடில்லா வலிப்பில் ஏற்படுவது போன்றது.

labiodental : உதடு-பல் சார்ந்த : உதடுகள் மற்றும் பற்கள்தொடர்பான.

labioglossolaryngeal : வாய் முடக்குவாதம் : உதடுகள், நாக்கு குரல்வளை ஆகியவற்றில் படிப்படியாக ஏற்படும் முடக்கு வாதம்.

labioglossopharyngeal : உதடு-நாக்கு-தொண்டை சார்ந்த : உதடுகள், நாக்கு, தொண்டை தொடர்புடைய.

labiograph : உதட்டசைவுக் கருவி : பேசும் போது உதடுகளின் அசைவினைப் பதிவுசெய்யும் கருவி.

labiomental : கீழுதடு-முகவாய்க் கட்டை சார்ந்த சார்ந்த: கீழுதடு மற்றும் முகவாய்க் கட்டை தொடர்புடைய.

labionasal : மேலுதடு-முக்கு சார்ந்த : மேலுதடு மற்றும் முக்கு தொடர்புடைய.